[Tamil/தமிழ்] உங்கள் எரிசக்திக் கட்டணங்களைச் செலுத்த உதவி தேவையா?
If you are having trouble paying your electricity and gas bills
Publisher
Australian Government
Date
Topic
உங்கள் மின்சாரம் மற்றும் எரிவாயுக் கட்டணங்களைச் செலுத்துவதில் உங்களுக்குச் சிரமம் இருந்தால்:
- உங்கள் விற்பனையாளரிடம் பேசுங்கள். அவர்களின் எண் உங்கள் கட்டணச் சீட்டில் உள்ளது.
- உங்கள் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்த முடியாவிட்டால், நெருக்கடிகால ஆதரவு பற்றிக் கேளுங்கள்.
- ஒரு தவணைத் திட்டத்தில் சேர்ந்து, நீண்ட கால அளவில் அல்லது சிறிய அளவில் சீராகப் பணம் செலுத்துமாறு இருக்க வேண்டுமெனக் கேளுங்கள்.
- இணைப்புத் துண்டிக்கப்படுதல், வட்டி கட்டுதல் மற்றும் தாமதக் கட்டணங்கள் செலுத்துதல் போன்றவற்றிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள அந்தத் திட்டத்தைத் தொடருங்கள்.
- வீட்டிலோ அல்லது பணியிடத்திலோ உங்களுக்கு உதவ அரசாங்கச் சலுகைகள் அல்லது தள்ளுபடிகள் ஏதேனும் உள்ளதா என்று கேளுங்கள்.
வீட்டில் எரிசக்தியையும் பணத்தையும் சேமிப்பது பற்றிய கூடுதல் தகவல்களுக்கு https://www.energy.gov.au/households/translations என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.